ரெப்போ வட்டி விகிதம் குறைவு.. வீடு, வாகனம் லோன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி..!
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் காரணமாக வீடு மற்றும் வாகன லோன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கி கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.50% வட்டி விகிதம் உள்ள நிலையில், அது 0.25% குறைக்கப்பட்டதால், தனிநபர் கடன், வீடு மற்றும் வாகன லோன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், லோன் வாங்கியவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Edited by Siva