செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (12:52 IST)

ஆண்கள் உரிமைத் தொகை குறித்து தான் பேசியதை திரித்து வெளியிட்டுள்ளனர்- அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன்!

சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
 
இப் போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார்.
 
இதன் பின்னர் செய்தியார்களை சந்தித்து பேசியதாவது......
 
நேற்றைய தினம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என நான் கூறியதாக ஊடகங்களில் திரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
 
ஆண்களும் பெண்களும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமமாக வாழ வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி.
 
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக எப்போது பொறுப்பு ஏற்பார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு:
 
அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.