வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (16:13 IST)

எந்தெந்த கடைகள் எத்தனை மணி வரை செயல்படும்? – அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தியுள்ள நிலையில் எந்தெந்த கடைகள் எவ்வளவு நேரம் செயல்படலாம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் திறந்தே இருக்கும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் மக்கள் பொருட்கள் வாங்க செல்வதாக தொடர்ந்து சாலைகளில் சுற்றுவதால் கடைகள் செயல்பட நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி கடைகள், மார்க்கெட்டுகள் காலை 6 மணி தொடங்கி 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை உணவகங்கள் 7 மணி முதல் 9 மணி வரை செயல்படலாம். மளிகை பொருட்களை விற்கும் கடைகள் மதியம் 12 மணி வரையிலும் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் விநியோகஸ்தர்கள் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகிப்பதாக கூறியுள்ள நிலையில் 24 மணி நேரமும் ஆவின் பாலகங்களில் பால் பாக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.