1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (19:02 IST)

இலங்கைக்கு நிவாரண பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து கிளம்புகிறது கப்பல்!

ship srilanka
இலங்கைக்கு நிவாரண பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து கிளம்புகிறது கப்பல்!
இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட உள்ள நிவாரண பொருட்களை கொண்ட கப்பல் நாளை சென்னையில் இருந்து கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
 
 இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்து அதற்காக பொருள்கள் திரட்டினார்.
 
இந்த நிலையில் அந்தப் பொருள்கள் சென்னையிலிருந்து நாளை கப்பல் மூலம் கிளம்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகை உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது