கமல் கார் வாங்கி கொடுக்கவில்லை. இதுமட்டும் தான் தந்தார்.. ஷர்மிலி தந்தை பேட்டி..!
கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநருக்கு கமல்ஹாசன் கார் வாங்கி கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது தந்தை கார் வாங்குவதற்கு முன்பணமான ரூபாய் 3 லட்சம் மட்டுமே கமல் கொடுத்தார் என பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்த ஷர்மிளா கனிமொழியுடன் பேருந்தில் சென்றதை அடுத்து அவரது உரிமையாளர் அவரது பணியை டிஸ்மிஸ் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்த செய்திகள் விறுவிறுப்பாக வைரலான நிலையில் கமல்ஹாசன் அவரை அழைத்து கார் வாங்கி கொடுத்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் ஷர்மிளாவின் தந்தை பேட்டி அளித்த போது ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் கார் வாங்க தரவில்லை என்றும் கார் வாங்குவதற்கான முன்பாக மட்டுமே தந்தார் என்றும் கூறியுள்ளார்
இதுகுறித்து மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் விளக்கமளித்த போது ஷர்மிளாவின் தந்தையிடம் கமல் மூன்று லட்ச ரூபாய் தந்துள்ளார். அதன் மூலம் மாருதி கார் ஒன்றை வாங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளார். காரை புக் செய்ததும் மீறி பணத்தை காசோலையாக அவர் வழங்குவார் என்று தெரிவித்துள்ளனர்
Edited by Mahendran