1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (12:51 IST)

”விக்ரம் லேண்டரை நான் இப்படித் தான் கண்டுபிடித்தேன்”.. விளக்கும் மதுரை எஞ்சினியர்

மதுரையை சேர்ந்த எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன், தான் லேண்ட்ரை எவ்வாறு கண்டுபிடித்தார் என விளக்கியுள்ளார்.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன், விக்ரம் லேண்டாரை கண்டுபிடிக்க நாசாவிற்கு உதவியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சுப்ரமணியன் லேண்டரின் பாகங்களை எவ்வாறு தான் கண்டுபிடித்தார் என விளக்கியுள்ளார்.

நாசா வெளியிட்ட நிலவின் புதிய மற்றும் பழைய புகைப்படங்களை ஆய்வு செய்த சுப்ரமணியன், பல புகைப்படங்களிலும் ஒரு சிறிய  புள்ளியை தவிற வேறெந்த மாற்றங்களையும் அவர் கண்டறியவில்லை.

இந்நிலையில் அந்த புள்ளியே விக்ரம் லேண்டாரின் பாகங்களாக இருக்கும் என அக்டோபர் 3 ஆம் தேதி நாசாவை குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளார். மேலும் ஈமெயிலும் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் நாசா தொடர்ந்து பல புகைப்படங்களை ஆய்வு செய்தும், சுப்ரமணியனின் தகவல்களை கொண்டும் ஆராய்ச்சி செய்த பின்னர் விக்ரம் லேண்டாரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து சண்முக சுப்ரமணியம் “லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட இடமெல்லாம் எனக்கு தெரியாது. நான் இணையத்தில் தகவல்களை சேகரித்தேன். அதன் மூலமே நான் தொடர்ந்து ஆய்வு செய்தேன்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.