1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (09:32 IST)

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மயிலாப்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
நொச்சி நகரை சேர்ந்த சிந்து எனும் இளம்பெண் மன நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8 வருடமாக கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நேற்று அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த முத்து என்பவர் அவரை தனியாக அழைத்து சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
 
முத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். உடனே அவரது பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்ததும், முத்து அக்கிருந்து ஓடிவிட்டார்.
 
பின்னர் இளம்பெண் சிந்துவின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் முத்துவை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பல நாட்களாக சிந்துவை நோட்டமிட்டு அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட முத்து சிறையில் அடைக்கப்பட்டார். முத்துவுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.