1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (17:17 IST)

சிறுமியை பாத்ரூமிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை: 3 பேர் கைது!

சிறுமியை பாத்ரூமிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை: 3 பேர் கைது!

மயிலாடுதுறை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் என்பவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை அருகில் உள்ள பாத்ரூமிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
 
இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்து அருகில் உள்ளவர்களை துணைக்கு அழைத்து விக்னேஷை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 
போலீசார் விக்னேஷிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு மேலும் இரண்டு பேர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த வேல்கண்ணன் என்பவரும் மேலும் ஒரு சிறுவனும் சிறுமியிடம் தவறாக நடந்தது தெரியவந்துள்ளது.
 
அதன் பின்னர் போலிசார் அவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 வயது சிறுமியை 3 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.