திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2015 (00:00 IST)

செப்டம்பர் 16: உலக ஒசோன் தினத்தை கொண்டாட அரசு உத்தரவு

செப்டம்பர் 16 ம் தேதி அன்று, உலக ஓசோன் தினத்தை பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

 
இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்  பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:-
 
வேகமாக பரவி வரும் சுற்றுச்சூழல் மாசுகளை தடுத்து நிறுத்தும் வகையில், உலகம் முழுவதும் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை கொண்டாடும் வகையில், செப்டம்பர் 16 ம் நாள் உலக ஓசோன் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 
 
எனவே, ஒசோன் தினத்தை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களை கொண்டு பேரணி, மனிதசங்கிலி மற்றும் மரக்கன்று நட்டு பராமரித்தல் செய்ய வேண்டும்.
 
மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற பராமரிப்பு நிதியில் இருந்து பரிசுகள் வழங்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.
 
இதே போல, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தஅந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.