ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (17:03 IST)

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு..!

senthil balaji
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார் என்பதும் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் சென்ற போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் மீண்டும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள நிலையில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே 49 முறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் நீதிமன்ற காவல் நீடிக்கப்படுவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்த நிலையில் காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Edited by Siva