1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (07:45 IST)

செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை.. 900 பேர்கள் மீது குற்றச்சாட்டு..!

செந்தில் பாலாஜி வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த புதிய குற்ற பத்திரிகைகள் சுமார் 900 பேர் குற்றம் சாட்டவர்களாக சேர்க்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி  மீது தொடரப்பட்ட வழக்கு தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.


இந்த நிலையில் இந்த வழக்கில்  கூடுதல் குற்றப்பத்திரிக்கையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் சிலரை விசாரிக்க அனுமதி வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 900 பேர் குற்றம் காட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில் 900 பேர்களை விசாரிக்க அனுமதி வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
Edited by Siva