பசிக்குது சீக்கிரம் முடிப்பான்னு அமைச்சர் ஒருமையில் சொல்கிறார்: வேல்முருகன் ஆதங்கம்..!
சட்டமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது மூத்த அமைச்சர் ஒருவர், "பசிக்குது, சீக்கிரம் முடிப்பா" என்று ஒருமையில் பேசுகிறார் என்று தமிழக வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் வேல்முருகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேல்முருகன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜெயலலிதா ஒரே நாளில் 50 சட்டங்களை பாஸ் செய்து விடுகிறார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் சட்டமன்றத்தை நடத்தும் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் திமுக ஆட்சியிலும் சட்டமன்றம் குறைவான நாட்களில்தான் நடைபெறுகிறது.
ஒரே நாளில் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்கள் பற்றி விவாதம் செய்ய கூட நேரமில்லை. நான் சட்டமன்றத்தில் ஒரு நிமிடம் கூட பேசாத நிலையில், 'சீக்கிரம் முடிப்பா, பசிக்குது என்று மூத்த அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசுகிறார்," என்றார்.
"கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி ஆகியவைகள் தான் எங்களுக்கு கிடைக்கிறது. சட்டமன்றம் என்பது கோடிக்கணக்கான மக்கள் தேர்வு செய்த எம்எல்ஏக்கள் பேசும் ஒரு இடம். அந்த இடத்திலும் கூட எங்களுக்கு மரியாதை இல்லை," என்று தமிழக வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் வேல்முருகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran