1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:48 IST)

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடக்கம்!

இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து இன்று கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு கல்லூரி மாணவர்களுக்கு தொடங்கும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் இன்று கல்லூரி திறக்கும் முதல் நாளில் மாணவர்கள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வு நடத்துவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் கல்லூரி நிர்வாகம் வைத்திருப்பதாகவும் இன்று கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது