ஞாயிறு, 15 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (14:05 IST)

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு..! அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..!!

Stalin
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி  முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடகா முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று  அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரத்தில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காவிரி நதிநீரை பெற உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசுக்கும் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பு, காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டுமென்று கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது.