செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

காங்கிரஸில் இன்னுமொரு விக்கெட் காலியா? கமல் கட்சியில் சேர்கிறாரா பிரமுகர்?

காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களில் ஒருவராக இருக்கும் செல்வப் பெருந்தகை விரைவில் கமல் கட்சியில் சேர உள்ளதாக சொல்லப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக வளர்ந்து வந்த செல்வப் பெருந்தகை, பின்னர் கட்சியில் ஏற்பட்ட மனக் கசப்புகளின் காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அங்கே அவருக்கு எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக அங்கும் அவருக்கு தலைமையோடு கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆசைப்படுவதாகவும் அதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.