ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:53 IST)

முதல்வரின் ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் ’மனநோயாளிகள்’ - சீமான்

லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவக்கல்லூரியின் கிளையை தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவரும் பொருட்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இந்நிலையில்  பாமக தலைவர் ராமதாஸ் :முதலமைச்சரின் இந்த பயணம் பயனுள்ளது. இது ஓரு எடுத்துக்காட்டாக உள்ளதாக  கூறியுள்ளார். மேலும் உலகின் தலைசிறந்த மருத்துவ  சுற்றுலா மையங்களில் ஒன்றாக திகழ்கின்ற தமிழ்நாட்டிற்கு கிங்ஸ் மருத்துவமனையின் கிளை வருவதும் மேலும் புகழைச் சேர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வரின் வெளிநாட்டு பயணத்துக்கு ஆதவளித்துள்ளார்.
 
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :தமிழக முதல்வரின் ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள் எனத் தெரிவித்தார்.மேலும் வேலை எதுவும் இல்லாதவர்களே ஆடை குறித்து விமர்சிப்பார்கள். இந்த மண்ணின் முதலமைச்சரை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்தார்.