நாளை அரசு விடுமுறை வேண்டும்: சீமான் கோரிக்கை!

seeman
நாளை அரசு விடுமுறை வேண்டும்: சீமான் கோரிக்கை!
siva| Last Updated: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:18 IST)
நாளை நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு என்ற மாநிலம் அங்கீகரிக்கப்பட்ட நாள் என்பதால் அரசு விடுமுறை என அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’இந்திய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரி மாநிலமாக பிரித்தது. இதன்படி நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு என்கிற நமது தாயக நிலம் இந்திய மத்திய அரசால் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலப்பகுதியானது

பெரும் புகழ் கொண்ட தமிழ்நாடு உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாடாக அறிவிக்கும் அரசாணையை தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 பிறப்பித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது வரவேற்கத்தக்கது

எனவே தமிழ்நாடு அரசு இத்தகைய பெருமைக்குரிய நாளை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழர்களின் முன்னோர்களான மூவேந்தர்களின் தமிழ் நாட்டுக் கொடியை மாநிலமெங்கும் அரசு அலுவலங்களிலும் அரசின் துறை சார்ந்த நிறுவனங்களிலும் ஏற்ற வேண்டும்’ என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்இதில் மேலும் படிக்கவும் :