அரசியலா பண்ற நீ..? சீமானை வெளுத்து எடுத்த கருணாஸ்!
நாம் தமிழர் கட்சி சீமான் கீழ்த்தரமான அரசியல் செய்து வருவதாக கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , முக் குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ், சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். கருணாஸ் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி சீமான் எல்லாவற்றையும் அரசியல் ஆக்குவதிலேயே முனைப்பாக உள்ளார்.
எதில் அரசியல் செய்ய வேண்டுமோ? அதில் தான் அரசியல் செய்யணும். எல்லாத்தையும் அரசியல் ஆக்குவது ரொம்ப ரொம்ப கீழ்த்தரமான அரசியல். ரஜினி ஒரு பாஜகவின் ஆள் என்பதால் தான் விருது கொடுக்கிறார்கள் என்று சீமான் சொல்வது மிகவும் தவறு.
சீமான், தனிப்பட்ட முறையில் ரஜினி மீது இருக்கும் கோபத்தை இதுபோன்ற நேரங்களில் அரசியல் ஆக்குவது துளியும் கூட ஏற்புடையது அல்ல என காட்டமாக பேசியுள்ளார்.