வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (04:36 IST)

சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் 122 எம்.எல்.ஏக்கள். கொந்தளிப்பில் மக்கள்

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுக்க கூடாது என பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும், போனிலும் கேட்டுக்கொண்டும், மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல், 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இதனால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.




தங்கள் ஊருக்கு திரும்பும் எம்.எல்.ஏக்களுக்கு 'சிறப்பு' வரவேற்பு கொடுக்க பொதுமக்கள்காத்திருப்பதாக உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும்ம் 122 எம்.எல்.ஏக்களின்  வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

எம்.எல்.ஏக்கள் சொந்த ஊர் திரும்பும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் மக்களின் மனம் மாறும் வரை சில எம்.எல்.ஏக்கள் சொந்த ஊர் திரும்புவதை தவிர்த்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.