செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (17:10 IST)

உள்ளாட்சி தேர்தல்: தனித்து போட்டியிடும் இன்னொரு கட்சி!

உள்ளாட்சி தேர்தல்: தனித்து போட்டியிடும் இன்னொரு கட்சி!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே பாமக, மநீம, உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் ஒன்று எஸ்டிபிஐ கட்சி. இந்த கட்சி தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது 
 
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஊழலற்ற ஆட்சி அமையவும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படவும் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்