பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்ல... பசங்களா ஜாலி தான் !!!
பள்ளிகள் இப்போது திறக்கப்படுவதற்காக சாத்தியம் இல்லை என இன்று பேட்டியளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.
அதன்படி ஜூன் 15 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. ஜூன் 15 – மொழிப்பாடம், ஜூன் 17 – ஆங்கிலம், ஜூன் 18 – கணிதம், ஜூன் 22 – அறிவியல், ஜூன் 24 – சமூக அறிவியல், மேலும் ஜூன் 20 விருப்பப்பாடமும், ஜூன் 25 தொழில்கல்வி தேர்வுகளும் நடைபெறும்.
ஆனால் பள்ளிகள் இப்போது திறக்கப்படுவதற்காக சாத்தியம் இல்லை என இன்று பேட்டியளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். அதேபோல 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வரும் வாரத்தில் ஆலோசனை. திங்கள் அல்லது செவ்வா கிழமை நடைபெறும் ஆலோசனையில் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.