வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (18:42 IST)

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!

கோப்புப்படம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் ஆசிரியர் வென்ஷீலிக் இஸ்ரேல் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதை வெளியே சொன்னால் மாணவியின் பெற்றோர் அவமானத்தில் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் மிரட்டி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆசிரியர் வென்ஷீலிக் இஸ்ரேல் என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.25000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran