1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (16:43 IST)

மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய முதுகுளத்தூர் ஆசிரியர் சஸ்பெண்ட்!

கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் பள்ளி ஆசிரியர்கள் குறித்த புகார்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரில் இருந்து ஆரம்பித்த இந்த புகாரின் சிவசங்கர் பாபா அவரை நீண்டு கொண்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் முதுகுளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றின் அறிவியல் ஆசிரியர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவருடன் ஆபாசமாக பேசியதாக வீடியோ ஆடியோ ஆதாரத்துடன் கூடிய புகார் அளிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதுகுளத்தூர் ஆசிரியர் ஹபீப் முகம்மது தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது 
 
பள்ளி மாணவிகளை வீட்டுக்கு வரச்சொல்லி ஆசிரியர் ஹபீப் முகமது மிரட்டியதாக ஆடியோ வைரலானது அடுத்து அவர் மீது பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது