1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2023 (13:06 IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

anbumani
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திடீரென சந்தித்துள்ளார். 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வழியாக உள்ளன. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘தர்மபுரி மாவட்டத்திற்காக காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். 
 
மேலும் முதலமைச்சர் இடம் எந்த வகையிலான அரசிடம் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் உடனான இந்த சந்திப்பை அடுத்து திமுக கூட்டணியில் பாமக இணையும் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அரசியல் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran