வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (10:21 IST)

சத்யராஜ் மகளுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு.. ஒரே மாதத்தில் முக்கிய பதவியா?

திமுகவில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இணைந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் அவருக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளாக அவருக்கு முக்கிய பொறுப்பை வழங்கப்பட்டு இருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக டி.பி.எம். மைதீன் கான் (பாளையங்கோட்டை திருநெல்வேலி), துணைத் தலைவராக வி.ஜோசப்ராஜ், துணைச் செயலாளராக கே.அன்வர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளராக குள்ளம் ராஜேந்திரன் (பெரம்பலூர்), கே.வி.எஸ்.சீனிவாசன் (கிருஷ்ணகிரி), செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக சூர்யா கிருஷ்ணமூர்த்தி (சென்னை), தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாக திவ்யா சத்யராஜ், பி.எம். ஸ்ரீதர் (செம்பனார்கோவில், மயிலாடுதுறை மாவட்டம்), பா.ச.பிரபு (மதுரை), கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக முனைவர் வே. தமிழ்பிரியா (சிவகங்கை மாவட்டம்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Edited by Siva