திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (13:12 IST)

தேர்தலுக்கு பின் எந்த கட்சியில் இணைவேன் என்பதை அறிவிப்பேன்: சத்யராஜ் மகள்

sathyaraj divya
நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் ஆனால் மக்களவை தேர்தலுக்குப் பின்னர் எந்த கட்சியில் இணைவேன் என்பதை அறிவிப்பேன் என்றும் சத்யராஜ் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களாகவே நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் திடீரென அவருக்கு பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் திவ்யா இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்த நிலையில் ’வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மைதான் என்று கூறினார் 
 
ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் நான் இணைய மாட்டேன் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார். நான் இணையும் கட்சி குறித்து பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அறிவிப்பேன் என்றும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
அவரது இந்த கருத்துக்கு ’நீங்கள் திமுக அல்லது காங்கிரஸ் ஆகிய இரண்டில் ஒன்றில் தான் இணைவீர்கள். இதில் என்ன பெரிய சஸ்பென்ஸ்’ என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள்.
 
Edited by Mahendran