1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (15:24 IST)

சசிக்கலாவின் சொத்துக்கள் அரசுடைமை! – திருவாரூர் ஆட்சியர் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள சூழலில் அவரது சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் சமீபத்தில் தமிழகம் திரும்பினார். சசிக்கலா, இளவரசி விடுதலையான நிலையில் சுதாகரன் மட்டும் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சசிக்கலாவுக்கு திருவாரூரில் சொந்தமாக இருந்த அரிசி ஆலை, குடியிருப்புகளை அரசுடைமையாக்கி அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். சசிக்கலா விடுதலையான நிலையில் சொத்துக்கள் தொடர்ந்து கையக்கப்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.