திங்கள், 2 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (11:14 IST)

வெறும் 13 நாட்கள் மட்டுமே சிறையில் தங்கியிருந்த சசிகலா?: பரவும் அதிர்ச்சி தகவல்!

வெறும் 13 நாட்கள் மட்டுமே சிறையில் தங்கியிருந்த சசிகலா?: பரவும் அதிர்ச்சி தகவல்!

வெறும் 13 நாட்கள் மட்டுமே சிறையில் தங்கியிருந்த சசிகலா?: பரவும் அதிர்ச்சி தகவல்!
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வந்தவாறு உள்ளன. இந்நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்படாத ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


 
 
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அடைக்கப்பட்டார் சசிகலா. அவர் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றுடன் 155 நாட்கள் ஆகிறது. ஆனால் அவர் சிறையில் வெறும் 13 நாட்கள் மட்டும் இருந்ததாகவும், மற்ற நாட்கள் வெளியே தங்கியிருந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சிறைக்கு அருகே சசிகலாவின் உறவினர்கள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு தான் சசிகலா பெரும்பாலான நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வருகிறது. சசிகலாவை உறவினர்கள் பார்க்க வரும் நாட்களில் மட்டும் தான் அவர் சிறைக்கு வருவார் என கூறப்படுகிறது. தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.