1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (14:09 IST)

உறவினர் மரணம் - பரோலில் வெளியே வருவாரா சசிகலா?

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தானலட்சுமி இன்று காலை மரணமடைந்தார்.


 

 
இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த நில நாட்களாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை மரணமடைந்தார்.
 
எனவே, அவருக்கு அஞ்சலி செலுத்த சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருவாரா என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் அண்ணன் மகன் சகாதேவன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போதும் சசிகலா பரோலில் வெளியே வருவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. 
 
எனவே, சந்தானலட்சுமிக்கு அஞ்சலி செலுத்த அவர் வருவாரா என்பது தெரியவில்லை.