1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (12:33 IST)

பாஜகவில் இணைகின்றாரா சசிகலா புஷ்பா?

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பாஜக இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது அதன் வேட்பாளர்கள் இன்னும் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலையில் பரிதாபமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பாஜக தமிழகத் தலைவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது பாஜகவில் இணைத்து வருகின்றனர். நேற்று கூட இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக அரசியல்வாதிகள் சிலரையும் பாஜகவில் இணைய தற்போது முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. முதல் கட்டமாக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவை பாஜகவில் இணைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இன்று பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் சசிகலா புஷ்பா இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிகலா புஷ்பா, பாஜகவில் இணைந்தால் அவரால் கட்சிக்கு பலம் கூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்