வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:30 IST)

குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய சசிகலா

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் குமாரின் பெண் குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என சசிகலா பெயர் சூட்டியுள்ளார்.


 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும், சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான செந்தில் குமார் அவரது மனைவியுடன் நேரில் சந்தித்து, தங்களது குழந்தையை காட்டி வாழ்த்து பெற்றனர்.

அப்போது கையில் வைத்திருந்த தங்களது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு சசிகலாவிடம் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்ற பெயரை சசிகலா சூட்டினார்.