1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:17 IST)

கூவத்தூர் டூ ராஜ்பவன் - எம்.ல்.ஏக்களுடன் ஆளுநரை சந்திக்கும் சசிகலா

தீர்ப்பை அடுத்து, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்க வேண்டும் என ஆளுனரை நேரில் சந்தித்து வலியுறுத்த சசிகலா ஆளுநர் மாளிகை செல்ல இருப்பதாக செய்திகள் வெளியானது..


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். இன்று மாலைக்குள் அவர்கள் கர்நடக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது... 
 
எனவே, அதிமுகவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களம் இறங்கிய சசிகலா தரப்பு, எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, ஆட்சி அமைக்க அவருக்கு அழைப்பு விடுவிக்க வேண்டும் என, அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநர் மாளிகைக்கு பேக்ஸ் மூலம் சசிகலா தரப்பு அனுப்பி வைத்துள்ளது.
 
ஆளுநர் நேரம் ஒதுக்கியவுடன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு, ஆளுநர் மாளிகைக்கு சசிகலா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது...