1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (10:08 IST)

சசிகலா ஒரு வில்லி, மிகக்கொடிய பெண்: வசை பாடிய ஹுசைனி!

சசிகலா ஒரு வில்லி, மிகக்கொடிய பெண்: வசை பாடிய ஹுசைனி!

தமிழகத்தில் சசிகலாவுக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் அதிகமாக வீசுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் தீவிர விசுவசியான கராத்தே வீரர் ஹுசைனி சசிகலாவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.


 
 
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹுசைனி நேரலையில் பேட்டியளித்தார். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹுசைனி முதல்வர் வீடருகே அமர்ந்தபடியே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் சசிகலாவை சரமாரியாக கடுமையாக வாசைபாடினார். எந்த ஒரு பெண்ணையும் மக்கள் இப்படி வெறுத்திருக்கமாட்டார்கள். சசிகலா ஒரு வில்லி, மிகக்கொடிய பெண் என அவரை விமர்சிக்க அதிர்ந்து போன நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகரிகமான வார்த்தைகளை உபயோகிக்க அறிவுறுத்தினார்.
 
இந்த மாதிரியான வார்த்தைகளை அனுமதிக்கமாட்டோம் என கூறினார். பின்னர் ஹுசைனி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தார்.