வதந்திகளை பொய்யாக்கி மீண்டுவந்த நடிகை – சினிமா பார்க்க சக்கர நாற்காலியில் வருகை !

பரவை முனியம்மா
Last Modified சனி, 8 பிப்ரவரி 2020 (08:19 IST)
பரவை முனியம்மா

உடல்நலக் கோளாறு காலமாக சில மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்த நடிகை பரவை முனியம்மா உடல்நலம் தேறியுள்ளார்.

தூள் படத்தின் சிங்கம்போல பாடலைப் பாடி நடித்த பரவை முனியம்மா பாட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் பிறகு விவேக், வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியவர்களுடன் காமெடிப் பாத்திரங்களில் நடித்துக் கலக்கி வந்தார்.

அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். உடல் நலிவுற்ற நிலையில் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கணக்கச் செய்தது.

இணையதளப் பத்திரிக்கை அப்போது பரவை முனியம்மா இறந்துவிட்டதாக கூட செய்தி வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கியது. அதற்கடுத்த நாளே பரவை முனியம்மா வீடியோ ஒன்றில் தான் உயிரோடு இருப்பதாக அறிவித்தார். அதன் பிறகு பல மாதங்கள் தொடர் சிகிச்சைப் பெற்ற அவர் இப்போது குணமாகியுள்ளார். இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லாத போது பார்த்துக்கொண்ட அபிசரவணன் நடித்துள்ள மாயநதி எனும் திரைப்படத்தை சக்கரநாற்காலியில் வந்து பார்த்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :