வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜர்: என்ன வழக்கு?

பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் ஆஜராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது
 
இது ஒரு ஒரு ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று பெங்களூரு இருபத்தி நான்காவது பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது
 
இந்த விசாரணைக்கு சசிகலா இளவரசி உள்பட 7 பேரும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் நேற்று பெங்களூர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.