வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (10:44 IST)

நடராஜன் மரணம் - சசிகலாவிற்கு 10 நாட்கள் பரோல்?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சசிகலாவின் கணவர் நடராஜன் சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலா இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார்.

 
உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் சற்றுமுன் காலமானார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் மரணமடைந்தார். இதையடுத்து அவரின் உடல் பெசண்ட்நகரில் உள்ள அவரின் வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
அதன்பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும். இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வருகிறார். 
 
கணவரின் மரணமடைந்ததை காரணம் காட்டி அவர் தரப்பில் 15 நாட்களுக்கு பரோல் கேட்கப்பட்டதாம். ஆனால், சிறை நிர்வாகம வருக்கு 10 நாட்கள் மட்டுமே பரோல் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா நேராக காரில் தஞ்சாவூர் சென்று கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.