1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 10 டிசம்பர் 2016 (15:48 IST)

போயஸ் கார்டனில் மக்களுக்கு சசிகலா ஆறுதல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து கடற்கரையில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் சென்று  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
அதேபோல், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டிற்கும் பொதுமக்கள் சென்று அவர்களின் உணர்வுகளை தெரிவித்து வருகின்றனர். இன்றும் சில பெண்கள் அங்கு சென்று ஜெ.வின் தோழி சசிகலாவிடம் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தினார். சசிகலா அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.