1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (15:01 IST)

நயன்தாராவுடன் நானா? - சரவணா ஸ்டார் சரவணன் மறுப்பு...

சரவணா ஸ்டோர் நிர்வாகி சரவணன், சினிமாவில் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.


 

 
சமீப காலமாக சரவணா ஸ்டோர் விளம்பரங்கள் அனைத்திற்கும் அதன் உரிமையாளர் சரவணன் தான் விளம்பர மாடலாக வருகிறார். பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகா உடன் விளம்பரங்களில் நடித்து வருகிறார் சரவணன். 
 
அந்நிலையில், நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கிய சரவணன், அதன் பின் செய்தியாளர்களிடம், விரைவில் தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும், தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்துக்கு நயன்தாராவுடன்தான் ஜோடி சேருவேன் எனவும் கூறியதாக செய்திகள் வெளியானது.
 
இவரது விளம்பரங்களை ஏற்கனவே சமூக வலைதளங்களில் கலாய்த்தும், விமர்சித்தும் வந்த நெட்டிசன்கள், இவரது சினிமா அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். 
 
இந்நிலையில், அப்படி வெளியான செய்தி அனைத்தும் வெறும் வதந்தி எனவும், சரவணனுக்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லை எனவும், சரவணா ஸ்டோர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.