புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (12:38 IST)

மருத்துவர்கள் முடிந்த வரை சிகிச்சை அளிக்கிறார்கள் - அப்பல்லோ செயல் இயக்குனர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவர்கள் முடிந்த வரை சிகிச்சை அளித்து வருகிறார் என அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியின் மகளும், அப்பல்லோ குழுமத்தின் செயல் இயக்குனருமான சங்கிதா ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டது.
 
அவரின் இருதயநாள அடைப்பை சீர் செய்வதற்காக ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவர்களால் கண்காணிக்கப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அப்பல்லோ குழுமத்தின் செயல் இயக்குனர் சங்கிதா ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் “முதல்வரின் உடல்நிலையை எங்கள் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தங்களால் இயன்ற வரை அவர்கள் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.