1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜூலை 2020 (08:13 IST)

கந்த சஷ்டி அவதூறுக்கு பழி தீர்க்க பெரியார் மீது காவி சாயம்!!

பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் சரண்டர்ரானவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
சமீப காலமாக கடவுள் மறுப்பாளர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.  
 
இதனால் கடவுள் மறுப்பு பேசி வரும் திராவிட இயக்கங்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்துள்ளது.  இந்நிலையில் கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போலீஸாரிடம் தாமாக முன்வந்து சரணடைந்தார். 
 
இது தொடர்பாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது, கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில், இந்து கடவுள் முருகனை பற்றி இழிவாக பேசியதற்கு எதிர்ப்பை தெரிவிக்க பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசியதாக கூறினார். மேலும், அருண் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.