செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 9 செப்டம்பர் 2017 (13:35 IST)

விடுமுறை தினத்திலும் அலைமோதும் ஆர்.டி.ஓ அலுவலகம்!

வாகன ஓட்டிகள் அசல் ஓடுநர் உரிமம் வைதிருக்க வேண்டும் என்ற உத்தரவை அடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் விடுமுறை நாட்களிலும் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.


 

 
வாகன ஓட்டுநர்கள் தங்கள் கையில் அசல் ஓடுநர் உரிமத்தை கையில் வைதிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் விடுமுறை நாளான இன்றும் ஆர்டிஓ அலுவலகம் இயங்கும் என அரசு அறிவித்தது. 
 
இந்நிலையில் விடுமுறை நாளான இன்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைதிருக்க வேண்டும் என கட்டாயம் இல்லாதபோதே போக்குவரத்து காவல்துறையினர் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பது வழக்கம். தற்போது சொல்லவே வேண்டும். 
 
இதனால் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், தவறவிட்டார்கள் என உள்ளிட்டவர்கள் என பலரும் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் குவிந்து வருகிறார்கள்.