வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (10:22 IST)

தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலணையில் உள்ளது – ஆர்டிஐ!

தமிழ்நாட்டில் நீட் விலக்கு வேண்டும் என உருவாக்கப்பட்ட மசோதா பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் மசோதா உருவாக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அந்த மசோதாவின் நிலை என்ன என்பது குறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு இப்போது ஆளுநரின் தகவல்தொடர்பு அதிகாரி அளித்துள்ள பதிலில் ‘அந்த கோப்பு ஆளுநர் ஆர் என் ரவியின் பரிசீலணையில் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.