செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (09:17 IST)

முன்னாள் முதல்வர், ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். 
 
ரோசய்யா உடல்நிலை பாதிக்கப்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் . கொனியேட்டி ரோசையா எனும் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். 
 
ரோசய்யா தனது அரசியல் பயணத்தில் வகித்த முக்கிய பதவிகளின் விவரம் பின்வருமாறு... 
 
# 1968, 1974 மற்றும் 1980 ஆந்திர மாநில சட்டப்பேரவை
# 1977-1979 ஆந்திர மாநிலம் தொழில்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர்.
# 1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்.
# 1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர்.
# 1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
# 1982-1983 ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.
# 1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, அமைச்சர்.
# 1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
# 1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
# 1995-1997 ஆந்திரமாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்.
# 1998 நரசரொபேட் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
# 2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம்,குடும்ப நலத்துறை அமைச்சர்.
# 2009-2010 ஆந்திர மாநில முதல்வர்.
# 2011-2016 தமிழ்நாடு ஆளுநர்.