வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (15:07 IST)

எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறு தெரியாது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி..!

எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு தெரியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 
 
இன்று அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது முதலமைச்சருக்கு பதில் கூற முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி எதையோ பேசுகிறார் என்றும் ஒருவருக்கு மாரடைப்பு எப்படி வரும் என்பதை யாருக்கும் தெரியாது என்றும் திமுக தொண்டருக்கும் மாரடைப்பு என்றால் நாங்கள் பதறிப் போய் பார்ப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார். 
 
யாருக்கு இன்னல் ஏற்பட்டாலும் ஓடிப்போய் பார்க்கக் கூடியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டவர்கள் தான் அதிமுகவினர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு கண்டெய்னர் லாரியில் 570 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக இதுவரை சிபிஐ விசாரணை செய்யவில்லை என்றும் எம்ஜிஆர் கட்சி தொடங்கியது முதல் இதுவரை திமுகவினர் மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்ற படி ஏற தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva