நிர்மலா சீதாராமனை தரைக்குறைவாக பேசிய காங்கிரஸ் எம்.பி..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் எம்.பி. தரைக்குறைவாக பேசியதாக பாஜக உறுப்பினர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்ததால் மக்களவையில் சலசலப்பு நிலவியது.
வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் எம்.பி.அதிர் ரஞ்சன் சவித்ரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குறித்து தரைகுறைவான வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளார்.
அதாவது நிர்மலா சீதாராமன் பலவீனமானவர் என்பது போன்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அவையில் உள்ள பாஜகவினர் கண்டத்து கோஷம் போட்டனர். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லா, அவை மரபை மீறி பேச வேண்டாம் எனவும் இது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் இதற்கு பதிலடி தருவது போல், ”தாம் இப்பொழுதும் நிர்மலா தான் எனவும், தன்னிறைவு பெற்ற பெண்” எனவும் கூறினார். இதனால் மக்களவை சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.