செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (11:06 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய போலீசார் திட்டம்!

ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் கைதானவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த ஐந்தாம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை சம்பந்தமாக முதலில் 11 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் சில அரசியல் கட்சியில் உள்ளவர்கள் உட்பட 9 பேர் என மொத்தம் 20 பேர்  கைது செய்யப்பட்டனர் என்பதும் காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக மேலும் கைதான 20 பேர்களின் வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்கு தரப்பட்ட பணம், இதன் மூலம் வாங்கிய சொத்துக்கள் எவ்வளவு என ஆய்வு செய்து அதன் பின்னர் பறிமுதல் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்னும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran