திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (20:25 IST)

நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி: எத்தனை லட்சம் தெரியுமா?

நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
இன்று மாலை பிரபல ரெளடி துரைத்து என்பவர் காவலர் மீது வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் இதனை அடுத்து காவலர்கள் திருப்பி சுட்டதில் துரைமுத்து பலியானார் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியம் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார்
 
இந்த அறிவிப்பை அடுத்து சுப்பிரமணியம் குடும்பத்தினரும் சற்று ஆறுதல் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது