திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:55 IST)

அமித்ஷாவுக்காக பிரார்த்தனை செய்த முதல்வர் பழனிசாமி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார் 
 
இந்த நிலையில் திடீரென இன்று அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உடல் சோர்வு உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் அமித்ஷா விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து தனது அன்றாடப் பணிகளையும் சேவைகளையும் செய்வார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்