திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 8 ஜூன் 2024 (13:51 IST)

என்னது ரூ.40 கோடி ஜிஎஸ்டி-யா? அதிர்ச்சியில் உறைந்த பெண் தொழிலாளி..!

GST
ஜோலார்பேட்டை அருகே நூறு நாள் வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு ரூ.40 கோடி ஜிஎஸ்டி கட்ட கோரி நோட்டீஸ் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மலர். இவர் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு விழுப்புரம் வணிக வரி துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டப் படி இந்த ஆண்டுக்கான வரி மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கான அபராதம் என மொத்தம் ரூ.40  கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த கூலி தொழிலாளி மலர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் தனக்கு ரூ.40  கோடி செலுத்த கோரி நோட்டீஸ் வந்துள்ளதாக தெரிவித்தார்.

 
இந்த பிரச்சினையிலிருந்து  மீள்வதற்கு அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 40 கோடி ஜிஎஸ்டி கேட்டு பெண் கூலி தொழிலாளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.