கடத்தல் கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு...18 பேர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரியோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரெசில் நாடான ரிலோ டி ஜெனிரியோவில் உள்ள ஒரு பகுதியிலலொரு கடத்தல் கும்பல் பதுங்கி இருந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலிஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடத்தல் கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். இதில், கடத்தல்கார்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில், மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.